உன்னை பார்த்த அந்த இடம்,
உருகுலைந்து போனது...
காத்திருந்த சாலை ஓரம்
தடம் மாறிப்போனது...
உன் பெயரை பொறித்த
மரங்கள் மடிந்து போனது...
உன்னை ரசித்த என் கண்களுக்கு,
நீ தூரமாய் போனாய்...
ஆனால் உன் மீது கொண்ட
காதல் மட்டும்,
என் உயிரோடு உறைந்து,
இன்னும் கவிதையாய் வாழ்கிறது...
என் கண்களை பார்த்தால்,
காதல் வந்துவிடுமோ?
என்று பயந்து தான்
கண் மறைந்து போனாயோ??
No comments:
Post a Comment